தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி 32 லட்சம் பேருக்கு உதவித்தொகை நிறுத்தம்: முதியோர், மாற்றுத் திறனாளிகள் அவதி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம்காட்டி, ஏப்ரல் மாதத்துக்கான தமிழக அரசின் மாதாந்திர உதவித்தொகைகள் இதுவரை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், இலங்கை அகதிகளுக்கு உதவித்தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உட்பட தமிழகம் முழுவதும் 32 லட்சம் பேருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம், உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QxbGhw
via
No comments