Breaking News

Tamil News Live Today: திமுக ஃபைல்ஸ்: இன்று காலை 10.15 மணிக்கு திமுகவினரின் சொத்து, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை!

இன்றுதிமுகவினரின் சொத்து, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என முன்னரே அறிவித்திருந்தார். இந்த நிலையில், `தி.மு.க-வின் ஊழல் பட்டியல் இன்று காலை 10:15 மணிக்கு வெளியிடப்படும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

``தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் காலை சரியாக 10.15 மணிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை ( DMK FILES) திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் வெளியிடுகிறார்.” என பாஜக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



from India News https://ift.tt/8ig9Knz

No comments