Breaking News

2024 தரதலல தமழர பரதமரக அறவயஙகள நஙகள ஆதரககறம - சமன பசச

மண்வளமே மக்கள் நலம் என்ற தலைப்பில் நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் மலைகளை அழித்து கேரளாவுக்கு கடத்துவது குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "உலகத்தில் எவன் உயர்ந்த மனிதன் என்றால் வீழ்ந்து கிடப்பவனை குனிந்து எவன் கைதூக்கி விடுகிறானே அவன்தான் உயர்ந்த மனிதன். இந்த தத்துவம் உருவாவதற்கு முன்பே இந்த மண்ணில் பிறந்த புரட்சியாளன் வைகுண்டர். `தாழகிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ எனக்கூறிவிட்டார். மார்ஷல் நேசமணி இந்த மண்ணை மீட்க போராடினார். அவருடைய பேரன் பேத்திகள் இந்த மண்ணை காக்க போராடிக்கொண்டிருக்கிறோம்.

நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் சீமான்

புரட்சி சிந்தனைகளை நம் இதயத்தில் தூவிய பொதுவுடமை ஜீவானந்தம் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம். நாம் தமிழர் கட்சியில் தன்னை அங்கத்தினராக இணைத்துக்கொண்டு கட்சிக்கு பெருமை சேர்த்த சாகித்ய அகடமி விருபெற்ற குளச்சல் யூசுப் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நாம் தமிழர் கட்சியில் இருப்பதால் சாகித்ய அகடமி பெற்ற அவருக்கு வீடு கொடுக்கவில்லை. அவருக்கு இந்த நாட்டை பெற்றுத் தருவேன். இன்றைக்கு உலகெங்கிலும் எத்தனையோ அரசியல் பேரியக்கங்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் அதிக கட்சிகள் இருக்கின்றன. அதில் சூழியலுக்காக போராடக்கூடிய மிகப்பெரிய அரசியல் இயக்கம் நாம் தமிழர் கட்சி. மதம், சாதி, சாமி பற்றி பேச அரசியல் கட்சிகள் உள்ளன மனிதம் பற்றிபேச நாம் மட்டுமே உள்ளோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று போதித்தார்கள். தமிழர்கள் உயிர்மை நேயர்கள்.

ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 33 விழுக்காடு காடு இருக்க வேண்டும். மரம் வளர்க்கலாம், நீர்த்தேக்கம் உருவாக்கலாம். மலையை அழித்தால் எப்படி மீண்டும் உருவாக்க முடியும். மலை வளம்தான் மழை வளம். மேற்குத்தொடர்ச்சி மலை இல்லாமல் இருந்தால் மழை எப்படி பொழியும். மணல் எடுத்து நீங்கள் வெட்டி வைத்திருக்கும் குழிகளில் உங்களை உயிரோடு போட்டு புதைக்கும் நாள் வரும். தமிழ்நாடு மக்களின் மணல் தேவைக்குத்தான் மணல் அள்ளப்படுகிறதா. கேரளாவில், ஆந்திராவில் மணல் அள்ள முடியுமா. மலையை உடைத்தால் மீண்டும் யார் உருவாக்குவது.

சீமான்

பலகோடி தலைமுறைக்கான சொத்து இந்த பூமி. எதைப்பார்த்தாலும் பணமாகவும், காசாகவும் பார்க்க எப்படி உங்களால் பார்க்க முடிகிறது. இந்த பாவம் உங்களை சும்மா விடாது, பிச்சை எடுத்து சாகப்போகிறீர்கள். ஏறக்குறைய மலையை முடித்துவிட்டார்கள். விழிஞ்ஞத்தில் துறைமுகம் எதற்காக கட்ட வேண்டும். அங்குள்ள மக்கள் வேண்டாம் என போராடுகிறார்கள். இதுவரை இருந்த துறைமுகங்கள் இயற்கை துறைமுகங்கள். எதற்காக புதிதாக செயற்கை துறைமுகங்கள். கேரளாவில் மலை இருக்கும்போது அவர்கள் மலைகளை நொறுக்கி ஏன் கற்களை எடுக்கவில்லை. அவர்கள் மானத்தோடு வாழ்கிறான், மண்ணை நேசிக்கிறான். ஆனால் இங்கிருப்பவர்கள் மலை, நீர், காற்று நஞ்சானால் பரவாயில்லை பணம் போதும் என நினைக்கிறான்.

செந்தில் பாலாஜி வந்த பிறகு நிறைய கள்ளச்சாராயம் வந்துவிட்டது. பத்து லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால் நிறையபேர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள். இப்போது அந்த மகாராசனுக்கும் (செந்தில்பாலாஜி) முடியல. கைது என்றால் நெஞ்சுவலி வருவதை தெலுங்கு படத்திலும், விஜயகாந்த் படத்திலும் பார்த்திருக்கிறோம். அவருக்கு இ.சி.ஜி இயல்பு நிலையில் இல்லை என்கிறார்கள். உண்மையிலேயே செந்தில் பாலாஜியால் நாட்டு மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயல்பு நிலையில் இல்லை. மின்சார கட்டண உயர்வு, மின் தடை என எதுவும் இயல்புநிலையில் இல்லை. அதிலும் சரக்கு (மது) இயல்பு நிலையில் இல்லை.

பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆவணப்படம்

செந்தில் பாலாஜி அ.தி.மு.க ஆட்சி காலத்தில் செய்த ஊழலுக்கு இப்போது ரெய்டு நடத்துகிறார்களாம். ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் நடந்த ஊழலுக்கு இப்போது ரெய்டு போகிறீர்கள். இவ்வளவு நாட்கள் என்ன செய்தீர்கள். தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். 2024 தேர்தலில் தமிழரை பிரதமராக அறிவியுங்கள் நாங்கள் ஆதரிக்கிறோம். பொன்.ராதாகிருஷ்ணனா, தமிழிசையா, அண்ணாமலையா யாரை அறிவிக்கிறீர்கள். 2 கோடி பேருக்கு வேலை எனச்சொன்னார்கள். வேலை கேட்டால் பக்கோடா விற்க சொல்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு உடம்பு சரியில்லை என்றால் அரசு ஆஸத்திரியில் போனவர் ஏன் தனியார் காவேரி ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும் என்கிறார். அமைச்சர் மனோதங்கராஜ் மகன் அரசு கல்லூரியில் படிப்பாரா. நாகர்கோவில் எம்.எல்.ஏ-வின் மகன், பேரன் பேத்திகள் அரசு பள்ளியில் படிப்பார்களா. நாம் தமிழர் ஆட்சியில் அரசுப் பள்ளி, கல்லூரியில் படிக்க சட்டம் கொண்டுவருவேன்" என்றார்.



from India News https://ift.tt/iP4e51J

No comments