Breaking News

கரள: மநல தலவர மத மசட வழகக... பனரய அரசன பழவஙகம நடவடகக - சடம கஙகரஸ

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். தன்னை ஸ்கின் டாக்டர் என்றும், பழமையான பொருள்களின் சேகரிப்பாளர், மோட்டிவேசன் ஸ்பீக்கர், தெலுங்கு சினிமா நடிகர் என பெருமையோடு அறிமுகப்படுத்திக்கொண்டு சுமார் 24 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவந்துள்ளாராம். இந்த நிலையில், `புருனே சுல்தானின் கிரீடத்தை விற்பனை செய்ததில் 70,000 கோடி ரூபாய் தனக்கு வரவேண்டி உள்ளது. அதற்கு வரி செலுத்த பணம் கொடுத்தால் வட்டி இல்லாமல் நூறு கோடி ரூபாய் லோன் வாங்கித்தருகிறேன்’ என சேர்த்தலாவைச் சேர்ந்த ஷாஜி என்பவரிடம் 6.27 கோடி ரூபாய் வாங்கியுள்ளார் மோன்சன் மாவுங்கல். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காததால் ஷாஜி கொடுத்த புகாரின் பேரில் கேரள கிரைம் பிரன்ச் போலீஸார் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி மோன்சன் மாவுங்கல்லை கைது செய்தனர்.

மோசடி வழக்கில் சிக்கிய மோன்சன் மாவுங்கல்

மோன்சன் மாவுங்கல்லை கைது செய்து விசாரித்தபோதுதான் அவரின் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. கொச்சியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்ததுடன், அதில் ஒருபகுதியை மியூசியம் ஆக்கி, பழங்கால பொருள்கள் என பலவற்றை காட்சிக்கு வைத்திருந்தார். அதில் பெரும்பாலான பொருள்கள் போலியானவை என கண்டறியப்பட்டன. கேரள முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா உள்ளிட்ட பல வி.ஐ.பி-க்கள் மோன்சன் மாவுங்கல்லின் மியூசியத்துக்கு சென்றுவந்தது தெரியவந்தது. அதுபோன்று கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.சுதாகரனும் மோன்சன் மாவுங்கல்லிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் மோன்சன் மாவுங்கல்லின் மோசடி வழக்கில் முன்னாள் ஐ.ஜி லட்சுமணன், முன்னாள் டி.ஜி.பி சுரேந்திரன் மற்றும் கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அனூப் என்பவர் கிரைம் பிரான்ச் போலீஸில் அளித்த புகாரில் மோன்சன் மாவுங்கல் தன்னிடம் 2018-ம் ஆண்டு மோசடியாக பெற்ற 25 லட்சம் ரூபாயில், 10 லட்சம் ரூபாயை கே.சுதாகரன் வாங்கிச்சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்தே காங்கிரஸ் மாநில தலைவர் கே.சுதாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கொச்சியில் வைத்து விசாரணை நடத்த கிரைம் பிரான்ச் போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன்

இந்த வழக்கில் காங்கிரஸ் கேரள மாநில தலைவர் கே.சுதாகரன் கைதுச்செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கே.சுதாகரன் கூறுகையில், "எனக்கும் மோன்சன் மாவுங்கல்லின் மோசடிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. என்னை எப்படி குற்றவாளி ஆக்கினார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறேன்" என்றார்.

கே.சுதாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பினராயி விஜயன் அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, கே.சுதாகரனுக்கும் எனது வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என மோன்சன் மாவுங்கல் தெரிவித்துள்ளார்.



from India News https://ift.tt/P3xmUL7

No comments