Breaking News

``அண்ணாமலை சொன்ன அர்த்தம் வேற!" - விளக்குகிறார் வி.பி.துரைசாமி

“சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு சென்றார் என்பதற்காக சேகர் பாபு ஏன் பதவி விலக வேண்டும்? பா.ஜ.க-வின் கோரிக்கை அபத்தமாக இல்லையா?”

“சேகர் பாபுவின் செயலை எப்படி நியாயப்படுத்த முடியும்? கோயில் நகைகளை உருக்குவதாகச் சொன்னார். அந்த நகைகள் எங்கே இருக்கின்றன என இன்னும் சொல்லவில்லை. கோயில் நிலங்களை மீட்பதாகக் கணக்குச் சொன்னார்கள். யாரிடமிருந்து மீட்டார்களோ அவர்களிடமே பல இடங்களில் நிலங்களை மீண்டும் கொடுத்திருப்பதாகவும் தகவல் வருகிறது. சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்திலும் அறநிலையத்துறை செயல்பாடுகள் மோசமான விமர்சனங்களைப் பெற்றன. அறநிலையத்துறையின் அமைச்சராக இருக்கவே சேகர் பாபு அருகதையற்றவர்.”

அமைச்சர் சேகர்பாபு

“தமிழ்நாடு முழுக்க 1,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கிறார்களே? அது சாதனை இல்லையா?”

“கிடையவே கிடையாது. தனியார் கோயில்கள், ஏழை, எளிய மக்கள் கட்டிய கோயில்களை எல்லாம் சேர்த்து கணக்கு சொல்கிறார்கள். அதற்கும் அறநிலையத்துறைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.”

“சனாதனத்தை பிறகு பேசுவோம், பா.ஜ.க மீதான ரூ.7.50 லட்சம் கோடி ஊழலை முதலில் பேசுங்கள் என்கிறாரே உதயநிதி?”

“ஊழல்வாதிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சொல்லுகிறார்கள். தேர்தல் வந்துவிட்டது, கட்சி நடத்த வேண்டுமென்பதற்காக ஒரு குற்றச்சாட்டை சொல்லுகிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணிகள் முடியாவிட்டால் செலவுகள் அதிகரிக்கத்தான் செய்யும். அந்த அதிகரித்த செலவுகளைத்தான் சி.ஏ.ஜி அறிக்கை கூறியிருக்கிறது. ஊழல் என்றால் நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப வேண்டியதுதானே? அதற்கு அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதுவரை ஊழல் புகார் வராத ஒரே அரசாங்கம் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம்தான்.”

“செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் உதயநிதிக்கும், ஆ.ராசாவுக்கும் என்றார் அண்ணாமலை... இது என்ன பகிரங்க மிரட்டலா?”

“இது மிரட்டல் பேச்சல்ல. இந்து மதத்தை அவர்கள் இன்னும் எவ்வளவு இழிவுபடுத்தினாலும் அழியப்போவதில்லை, நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்துபோனார்கள். அந்த அர்த்தத்தில்தான் அண்ணாமலை சொன்னார்.”

அண்ணாமலை

“மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்கள் மத்தியில் தி.மு.க-வுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்களே?”

“அது முதலில் உரிமைத் தொகையே இல்லை, உதவித்தொகை. சட்டமியற்றி கொடுத்தால்தான் அது உரிமைத் தொகை. வாக்குறுதியை நிறைவேற்ற வழங்கும் தொகை எப்படி உரிமைத்தொகையாகும்? நாளையே ஆட்சி மாறினால், புதிதாக வரும் அரசு இதைக்கொடுக்க வேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை.”

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

 “உரிமைத்தொகை, கட்டணமில்லா பயணம், புதுமைப்பெண் திட்டங்களால் பெண்கள் மத்தியில் தி.மு.க செல்வாக்கு பெருகிவிட்டது என்கிறார்களே?”

“சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் பேச்சால் தி.மு.க-வுக்கு பெண்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துதான் இருக்கிறது. அகில இந்திய அளவில் பா.ஜ.க-வுக்கு 5% வாக்கு வங்கி கூடியிருக்கிறது. வரும் தேர்தலில் இது தெரியவரும்.”



from India News https://ift.tt/GRWg7ok

No comments