Breaking News

Tamil News Live Today: சிறப்புக் கூட்டத்தொடர்... இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்!

சிறப்புக் கூட்டத்தொடர்... இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்!

தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றாக, அலுவல் பணிகளுக்காகப் பிரமாண்டமான வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத்தொடரானது புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடந்து முடிந்தது. இந்த நிலையில், சிறப்புக் கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்றத்தில் கூட்டுவதென மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

புதிய நாடாளுமன்றம்

அதைத் தொடர்ந்து, சிறப்புக் கூட்டத்தொடரானது நேற்றைய தினம் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொடங்கியது. ஐந்து நாள்கள் நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்தொடரின் தொடக்க நாளான நேற்று மட்டும் பழைய கட்டடத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று முதல் சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறவிருக்கிறது. சிறப்புக் கூட்டத்தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெறும்.

மோடி

இது தொடர்பாக நேற்றைய தினம் பழைய நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ``இந்த நாடாளுமன்றத்தின் (பழைய கட்டடம்) ஒவ்வொரு செங்கல்லையும் மதிக்கிறோம், அவற்றுக்கு மரியாதை செலுத்துகிறோம். நாளை முதல் எம்.பி-க்கள் அனைவரும் புதிய நம்பிக்கையுடன், புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழைவார்கள்" எனக் குறிப்பிட்டார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவை மதியம் 1:15 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 2:15 மணிக்கும் கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது. மத்திய அரசு, இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் `ஒரே நாடு, ஒரே தேர்தல்', `பாரத்' பெயர் மாற்றம் எனப் பல விவகாரங்கள் தொடர்பான மசோதாக்களைத் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



from India News https://ift.tt/I3QNqEZ

No comments