சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பாதுகாப்புக்காக தமிழகத்துக்கு மேலும் 235 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை: மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பாதுகாப்புக்கு ஏற்கெனவே 65 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ள நிலையில், மேலும் 235 கம்பெனி துணை ராணுவப்படையினரை தேர்தல் ஆணையம் அனுப்ப உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர் தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முறை கரோனா பரவலுக்கு இடையில் தேர்தல் நடைபெறுவதால், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வாக்குச்சாவடிகளின் எண் ணிக்கையும் 68,324 என்பது 88,947 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்காளர்கள் எண்ணிக்கையும் தற் போது 3 லட்சம் அளவுக்கு உயர்ந் துள்ளதால், அதற்கேற்ப பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QzPQKz
via
No comments