Breaking News

தபால் வாக்கு பணியில் 70 குழுக்கள்: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகளை செலுத்தவும், அந்த வாக்குச் சீட்டுகளை பெறவும் 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே அந்த வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. அவ்வாறு 7,300 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31hfGoN
via

No comments