என்ன செய்கிறார்கள் போக்குவரத்து போலீஸார்? - மதுரை அரசு மருத்துவமனை நுழைவுவாயிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் ‘அடாவடி’: மருத்துவமனைக்கு வருவோர் உள்ளே செல்ல முடியாமல் தவிப்பு
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 3,500 உள் நோயாளிகள், 10 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் கள் உள்பட ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்துக்குள் வந்து செல் கின்றனர். ஆனால், அவர்கள் வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவதற்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை. அதனால், ஆங்காங்கே கிடைக்கிற இடங்களில் நோயாளிகள், பார்வை யாளர்கள், மருத்துவர்கள், செவி லியர்கள், மற்ற பணியாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PdiPmN
via
No comments