சென்னை மெட்ரோ ரயில்களில் முகக்கவசமின்றி பயணித்தால் இன்று முதல் ரூ.200 அபராதம்

மெட்ரோ ரயில்களில் இன்று முதல் (ஏப். 11) முகக்கவசம் இல்லாமல் பயணித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கரோனா தொற்றில் இருந்து விடுபட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நேற்று முதல் அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uGO1tX
via
No comments