சென்னையில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு: 2-ம் தவணை போட முடியாமல் மக்கள் அவதி
சென்னையில் கடந்த சில நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2-ம் தவணை தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்கள், சமுதாய நல மையங்கள், அனைத்து அரசு
மருத்துவமனைகள் ஆகியவற்றில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என மொத்தம் 12 லட்சத்து 93 ஆயிரத்து 775 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PiEnP4
via
No comments