Breaking News

கரோனா சிகிச்சைக்கான மருந்துகளை பதுக்கும் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கு 7 ஆண்டு சிறை: அரசு நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தல்

கரோனா சிகிச்சைக்கான மருந்து பதுக்கலைத் தடுக்க கள்ளச்சந்தை வியாபாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தர சட்டத்தில் வழிவகை உள்ளது என்று சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா இரண் டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக் கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு அதி கமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சைக்காக நாள்தோறும் வருகின்றனர். இத னால் மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுக்கான தேவை அதிகரி த்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nhr4Li
via

No comments