தேனி அருகே நள்ளிரவில் கிணற்றில் தவறி விழுந்த தாய், குட்டி யானை மீட்பு: தாயுடன் குட்டியை போராடி சேர்த்த வனத்துறை
தேனி மாவட்டம், அரசரடியில் நேற்று முன்தினம் இரவு கிணற்றில் தாய், குட்டி யானை தவறி விழுந்தன. வனத்துறை மீட்புக் குழுவினர் தாய் யானையை மீட்ட தும் வனத்துக்குள் சென்றுவிட்டது. பின்னர் மீண்டும் வந்த தாய் யானையுடன் குட்டியை வனத் துறையினர் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் மேகமலைப் புலிகள் வனச் சரணாலயப் பகுதி அமைந்துள்ளது. இங்கு புலி, யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் வசிக் கின்றன. இதற்கு அருகில் அரசரடி எனும் மலையடி கிராமம் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QX0s68
via
No comments