விஜயகாந்த் உழைப்பு வீணாகிவிட்டது: விஜயபிரபாகரன் ஆதங்கம்
பெரம்பலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன், குன்னம் தொகுதி அமமுக வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது: பல கட்சிகள் மக்களுக்கு பணத்தை கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்குகிறார்கள். விஜயகாந்த், டிடிவி.தினகரன் ஆகியோர் சுயமாக கட்சி ஆரம்பித்து சொந்தப் பணத்தை மக்களுக்காக செலவு செய்து வருகின்றனர். ஆனால், தேமுதிகவுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மறுக்கிறீர்கள்? எல்லா இடத்திலும் திறமைசாலிக்கு வாய்ப்பு கிடைக்குது. ஆனால் அரசியலில் மட்டும் திறமைசாலிக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சில நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் உங்கள் ஓட்டை விற்றால் நிச்சயம் ஊழல் தான் நடக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rIvXxJ
via
No comments