மாநிலங்களுக்கு 22 கோடி டோஸ் தடுப்பூசி விநியோகம்: 2 கோடி டோஸ் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு தகவல்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இதுவரை 22 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி, அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் கண்டுபிடித்து, புனே நகரின் சீரம் நிறுவனத்தில் தயாராகும் கோவிஷீல்டு, ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் ஆகிய 2 மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. சமீபத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yz7M9x
via
No comments