சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதத்தை இணைத்து புதிய மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கோரிக்கை
கரோனா நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, சித்தா, ஹோமியோ, ஆயுர்வேத மருத்துவத்தை இணைத்து, புதிய மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரடங்கை தொடர்ந்து நீடிப்பதாலோ, ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கை வசதிகள் அதிகரிப்பு ஆகியவற்றாலோ கரோனா 2-வது அலையிலிருந்து மீண்டுவிட முடியாது. தொலைநோக்குப் பார்வையின்றி, போதிய கட்டமைப்புகளை உருவாக்காமல் போனதன் விளைவே இத்தகைய நிலைமைக்கு காரணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RFbq0t
via
No comments