Breaking News

விளையாட்டாய் சில கதைகள்: விராட் கோலியின் சோக சாதனை

பொதுவாக ஐபிஎல் போட்டிகளுக்கும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் (ஆர்சிபி) பெரிய அளவில் ராசி இல்லை. விராட் கோலி, டிவில்லியர்ஸ், (முன்பு கிரிஸ் கெயில்), சாஹல், சைனி என்று பெரிய அளவில் நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறைகூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக முதல் 4 போட்டிகளில் வெற்றிபெற்று கணக்கை சிறப்பாக தொடங்கியது. அந்த அணியைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களைப் பார்ப்போம்:

ஐபிஎல் கோப்பையை வெல்லாவிட்டாலும், இத்தொடரில் அதிக ரன்களைக் குவித்த அணி என்ற பெருமை ஆர்சிபி அணியிடமே உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டித் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 263 ரன்களைக் குவித்ததே ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராகும். ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்ற பெருமை, ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலிக்கு உள்ளது. 2017-ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் ரூ.17 கோடி கொடுத்து விராட் கோலியை ஆர்சிபி அணி தக்கவைத்துள்ளது. இதற்காக ஆர்சிபி அணிக்கு நன்றி செலுத்தும் விதமாக விராட் கோலியும், ஆர்சிபி அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். 2016-ம் ஆண்டில் நடந்த தொடரில் மட்டும் இவர் 973 ரன்களைக் குவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uhtQ6e

No comments