Breaking News

இயக்குநர் வசந்தபாலனுக்கு கொரோனா தொற்று உறுதி!

இயக்குநர் வசந்தபாலனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 ’வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, காவியத்தலைவன்’ என சிலப் படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் தமிழில் கொண்டாடப்படும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகப் பார்க்கப்படும் இயக்குநர் வசந்தபாலனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,  “அன்புள்ள நண்பர்களுக்கு. நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால், பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க முடியவில்லை.என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

image

வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘வெயில்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ujOVga

No comments