Breaking News

இந்த ஆண்டில் இருக்கிறதா, இல்லையா?- நீட் தேர்வு குறித்து தற்போது உறுதியாக கூற முடியாது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நீட் தேர்வு இந்த ஆண்டு இருக்கிறதா, இல்லையா என்பதை தற்போது உறுதியாக சொல்ல முடியாது. இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கத்தான் செய்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை பெருங்குடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அவர்களுக்கு ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்கள், அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், துணை இயக்குநர் தர்மலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xsR7mO
via

No comments