கரோனா தொற்று தடுப்பு மருந்துகள் மற்றும் கருவிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு வரிவிலக்கு: கருணையுடன் அணுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்
கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகள், கருவிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். இந்த விஷயத்தை கருணையுடன் அணுக வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் வலியுறுத்திஉள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44-வது சரக்குகள் மற்றும் சேவை வரி மன்ற கூட்டம் காணொலி வாயிலாக நேற்றுநடைபெற்றது. இதில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், வணிகவரித்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி ஆணையர் சித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gevocp
via
No comments