சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி கோவையில் வசித்த வங்கதேசப் பெண் கைது: சென்னை புழல் சிறையில் அடைப்பு

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, கோவையில் வசித்து வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த பெண்ணை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
கோவை இருகூரைச் சேர்ந்தவர் ராம்குமார் (30). இவர், சரவணம்பட்டி காவல்நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதில்,‘‘சரவணம்பட்டி மகாநகர் அருகே என்னை சிலர் அணுகி, ஒரு பெண்ணை காட்டி பாலியல் உறவுக்கு அழைத்தனர். பணம் எடுத்து வருவதாகக் கூறிதப்பி வந்துவிட்டேன். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cUZ6Bj
via
No comments