Breaking News

முகக்கவசம் அணியாத 18 லட்சம் பேருக்கு அபராதம்: கடந்த 101 நாட்களில் போலீஸார் நடவடிக்கை

தமிழகம் முழுவதும் கரோனாபொதுமுடக்க விதிகள் அமலில்உள்ளன. முகக்கவசம் அணியாதவர்கள், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

கடந்த ஏப்.8-ம் தேதியில் இருந்து, கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பதை போலீஸார்தீவிரப்படுத்தினர். அதன்படிஏப்.8 முதல் ஜூலை 17 வரை 101 நாட்களில் முகக் கவசம் அணியாத 18 லட்சத்து 7,651 பேருக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். அனைவருக்கும் தலா ரூ.200 அபராதம் விதிக்கப் பட்டுள்ளதோடு, நோய் பரப்பும் விதமாக செயல்பட்டதாகக் கூறி,வழக்கும் பதிவு செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rsJ0Vt
via

No comments