சுதந்திரப் போராட்ட தியாகிக்கு 1951-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பெற 70 ஆண்டுகளாக போராடும் வாரிசுகள்: கைகொடுப்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பாரதியார் தெருவில் வசித்து வருபவர் யுவராஜ் (63). இவரது தந்தை சுதந்திர போராட்ட தியாகி ஸ்ரீராமராஜி. தாயார் முனியம்மாள். யுவராஜூயுடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர் உள்ளனர். தியாகி ராமராஜின் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் கடந்த 1951-ம் ஆண்டு சூளகிரி அருகே தியானதுர்க்கம் மற்றும் காமன்தொட்டி ஆகிய கிராமங்களில் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலத்தை ஒப்படைக்கக் கோரி ஸ்ரீராமராஜி 33 ஆண்டுகளாக மனு அளித்து வந்த நிலையில் 1984-ம் ஆண்டு உயிரிழந்தார். தொடர்ந்து அவரது மனைவி முனியம்மாள் 26 ஆண்டுகளாக மனு அளித்து வந்தவர், கடந்த 2010-ல்உயிரிழந்தார். தற்போது அவரது மகன் யுவராஜ் 11 ஆண்டுகளாக நிலத்தை ஒப்படைக்க வலியுறுத்தி மனுக்கள் அளித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BQdWE0
via
No comments