Breaking News

யூரோ கால்பந்து தொடர்: பெல்ஜியத்தை 2-1 கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது இத்தாலி

யூரோ கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இத்தாலி அணி.

ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 13-வது நிமிடத்தில் இத்தாலி கோல் அடித்தது. ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. 22-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கெவின் டி ப்ரூய்ன் உதைத்த பந்தை இத்தாலி கோல் கீப்பர் கியான்லூகி டோனாரும்மா அருமையாக பாய்ந்து கோல் விழவிடாமல் தட்டிவிட்டார். 31-வது நிமிடத்தில் நெருக்கமான வகையில் 3 டிபன்டர்களுக்கு ஊடாக நின்ற இத்தாலியின் நிக்கோலே பரேல்லாவுக்கு மார்கோ வெராட்டி பந்தை தட்டிவிட அவர் அதை கோலாக மாற்றினார். இதனால் இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hyuhUr

No comments