மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு கிடைக்குமா? - ஆளுநரும், கல்வியமைச்சரும் நடவடிக்கை எடுப்பார்களா
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடு தரலாம் என்ற ஆய்வுக்குழு அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டு 5 ஆண்டுகளாக பதில் வராத சூழல் நிலவுகிறது. இதற்கான ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த புதுச்சேரி ஆளுநரும், கல்வியமைச்சரும் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் கடந்த 1985-ல் தொடங் கப்பட்டபோது புதுச்சேரியைச் சேர்ந்தோர் படிக்க 25 சதவீத இடஒதுக்கீடு கோரப்பட்டது. பல்கலைக்கழகம் ஆரம்பித்த முதல்10 ஆண்டுகளில் புதுச்சேரி மாண வர்களுக்கென்று தனி ஒதுக்கீடு எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் புதுச்சேரி மாணவர்கள் பல்கலைக் கழகத்தால் பெரிதும் புறக்கணிக் கப்பட்டபோது, புதுச்சேரி மாண வர்களுக்கு தனி இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eSoI2M
via
No comments