கொரோனா பாதிப்பு: வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி ஒத்திவைப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியா அணியுடனான 2-ஆவது ஒருநாள் போட்டி டாஸ் போட்ட பின்பு சில நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் முதலில் நடைபெற்றது. இதில் 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 2- வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. போட்டி தொடங்குவதற்காக டாஸ் போடப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக போட்டி தொடங்குவது நிறுத்தப்பட்டது. வீரர்கள் அனைவரும் ஹோட்டல் அறைக்க்கு திரும்ப அனுப்பப்பட்டனர். அனைத்து வீரர்களுக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதன் முடிவுகளின் அடிப்படையில் 2-வது ஒருநாள் போட்டி எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3rBBCr2
via
No comments