Breaking News

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் பிரதமர்மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.கே.சரஸ்வதி ஆகிய 4 பாஜக எம்எல்ஏக்களும் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்றுசந்தித்தனர். தேர்தலில் வெற்றி பெற்றதற்காக 4 பேருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Ap2dvp
via

No comments