அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

சோழிங்கநல்லூர் மேற்கு பகுதியைச் சார்ந்த அமமுக நிர்வாகிகள், அதிமுக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி. கந்தன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில், அமமுக தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து பலர் விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கண்ணகி நகரைச் சேர்ந்த அமமுக பகுதி இணை செயலாளர் வி. பாலகிருஷ்ணன், 195-வது வட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர். எஸ்.மணி, 195-வது வட்ட பிரதிநிதி எம். மனோகரன், பகுதி வர்த்தக அணி செயலாளர் பி.செல்வராஜ், 195-வது வட்ட அம்மா பேரவை இணை செயலாளர் பி.ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சென்னை புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், மேற்கு பகுதி கழக செயலாளர் டி.சி.கருணா ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36uR6Dy
via
No comments