Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சி 100 சதுர கி.மீ. பரப்பளவில் அமைய வாய்ப்பு: 7 கி.மீ. சுற்றளவில் உள்ள ஊராட்சிகளை இணைக்க திட்டம்

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள காஞ்சிபுரம் பெரு நகராட்சி 100 சதுர கி.மீ. பரப்பளவில் அமைய வாய்ப்பு உள்ளது. இதற்காக 7 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்கள் காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் தற்போது பெரு நகராட்சியாக உள்ளது. இந்த நகராட்சி 36.14 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 2 லட்சத்து 34 ஆயிரத்து 353 பேர் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் இது 3 லட்சமாக உயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நகராட்சி மொத்தம் 51 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mAcfFA
via

No comments