ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்: வேளாண் பட்ஜெட்டில் 2 கோடி ஒதுக்கீடு

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு ரூ.573.24 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இளநிலை தோட்டக்கலை பாடத்திட்டத்தை கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஒரு வகுப்பு தமிழ்வழியில் பயிற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கென முதல்கட்டமாக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 150 ஏக்கரில் தோட்டக்கலை கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதற்கு நடப்பாண்டு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ADr3Xu
via
No comments