உணவகங்களில் 50 சதவீதத்துக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தால் உரிமம் ரத்து
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, வரும்9-ம் தேதி வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும், நோய்த் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.
ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்துஉணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீதத்துக்கும் மேல் உணவருந்த அனுமதிக்கும் ஓட்டல் மற்றும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்களுக்கான தொழில் உரிம மும் ரத்து செய்யப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VdAcHd
via
No comments