Breaking News

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பவினா படேல்

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் - சீன வீராங்கனை ஜாங்க் மியா மோதினர். இதில் பவினா படேல் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ஜாங்க் மியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனையடுத்து பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை உறுதிச் செய்தார் பவினா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2US9S5k
via

No comments