Breaking News

நடிகர் சிம்புக்கு போட்ட ரெட் கார்டு நீக்கம்

நடிகர் சிம்புக்கு விதித்த ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.
 
நடிகர் சிம்புவின் கடந்தகால செயல்பாடு காரணமாக 4 தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த விவகாரங்களுக்கு தீர்வு எட்டப்படும்வரை சிம்புவின் படங்களில் 'பெப்சி' தொழிலாளர்கள் பணியாற்றக்கூடாது என்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மளேனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்பதாக பெப்சி அமைப்பு கூறியிருந்தது.
 
 
இந்நிலையில் நடிகர் சிம்புக்கு விதித்த ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. மேலும் 'வெந்து தணிந்தது காடு' படத்துக்கு தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ராயப்பனின் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அங்கே முடிவு செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kpavw0

No comments