டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 25,000 பார்வையாளர்களை அனுமதிக்க கோரிக்கை
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் 25 ஆயிரம் பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ மற்றும் அமீரக கிரிக்கெட் வாரியம் இணைந்து ஐக்கிய அரபு அமீரக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
20 ஓவர் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடர் இம்மூன்று மைதானங்களிலிலேயே நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு மைதானத்திலும் ரசிகர்களுக்கான அனுமதிக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில் துபாயில் நடைபெறவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரின் பிரமாண்ட இறுதிப் போட்டியில் குறைந்தது 25 ஆயிரம் ரசிகர்களையாவது அனுமதிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மற்றும் அமீரக கிரிக்கெட் வாரியங்கள் அமீரக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2XUY6sh
via
No comments