Breaking News

மதுரையில் குழந்தையின் தலையை தூக்கிக்கொண்டு ஓடிய நாய்

மதுரை பிபி குளம் பகுதியில் நேற்று மதியம் குழந்தையின் தலையை மட்டும் தூக்கிக்கொண்டு நாய் ஒன்று ஓடியது. அதை அங்கிருந்தவர்கள் விரட்டினர். இதையடுத்து குழந்தையின் தலையை கீழே போட்டுவிட்டு நாய் தப்பி ஓடியது. இது பற்றி தகவல் அறிந்த தல்லாகுளம் போலீஸார் தலையை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குழந்தை தலை துண்டித்து கொல்லப்பட்டிருக் கலாம் என தெரிகிறது. இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

போலீஸார் கூறுகையில், குழந்தையின் தலை கிடைத்துள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள கால்வாய், குப்பைத்தொட்டியில் உடல் கிடக்கிறதா என தேடி வருகி றோம். தொடர்ந்து குழந்தையை யாரேனும் வீசிச் சென்றார்களா என்பது குறித்தும் விசாரித்து வரு கிறோம் என்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hfIVk7
via

No comments