Breaking News

நவ.1-ல் திறப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; தீபாவளிக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம்: அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் உலக முதியோர் தின விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு, முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 100 வயது நிரம்பிய முதியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

திரைத் துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கிய நடிகர்கள் நிழல்கள் ரவி, சாந்தி வில்லியம்ஸ், பின்னணி பாடகர்கள் வி.வி.பிரசன்னா, வினயா கார்த்திக் ராஜன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. சமூக ஆர்வலர் மஞ்சுளா தேவி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமாகாவில் இணைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Y9JYv6
via

No comments