குஜராத்தில் ரூ.21,000 கோடி ஹெராயின் வழக்கில் கைதானவரின் கோவை வீட்டில் என்ஐஏ சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின
குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, கைதானவரின் கோவை வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து சுண்ணாம்புக்கல் எனக்கூறி ஹெராயின் பொட்டலங்கள் கொண்ட சரக்கு பெட்டகங்கள் ஈரான் வழியாக குஜராத்தின் முந்திராதுறை முகத்துக்கு சமீபத்தில் கொண்டு வரப்பட்டன. அதில் ரூ.21 ஆயிரம் கோடிமதிப்புள்ள 2,988 கிலோ ஹெராயின்இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இவ்விவகாரத்தை விசாரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AoDKVO
via
No comments