Breaking News

இயற்கை முறையில் ஊடுபயிர் விவசாயம்; விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து சாதனை: செங்கோட்டையில் பிரமிக்க வைக்கிறார் 78 வயது பொறியாளர்

தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (78). மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ள இவர், சிமென்ட் மற்றும்உரங்களை பேக்கிங் செய்வதற்கான பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கினார். பின்னர், தொழிற்சாலைப் பொறுப்பை சகோதரரிடம் கொடுத்துவிட்டு, 100 ஏக்கரில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். விளைபொருட்களை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துகிறார். சீரகச் சம்பா, கருப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் உயரிய மா, வாழை ரகங்களை சாகுபடி செய்து, இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்கிறார்.

இதுகுறித்து, ஈஸ்வரன் மேலும் கூறியதாவது: கடந்த 1976 முதல் விவசாயம் செய்து வருகிறேன். நெல் சாகுபடியில் வருவாய் கிடைக்கவில்லை. பெரும்பாலும் நஷ்டம் ஏற்படும். இதனால், 20 ஏக்கரில் நெல் சாகுபடியும், எஞ்சிய 80 ஏக்கரில் மரப்பயிர்களையும் சாகுபடி செய்துள்ளோம். ஒட்டு மா, தேக்கு, கொய்யா, நெல்லி, பலா உள்ளிட்ட பணப்பயிர்களை சாகுபடி செய்யத்தொடங்கினேன். தென்னந்தோப்பில் ஊடுபயிராக வாழை ரகங்களை சாகுபடி செய்துள்ளேன். சீரகச்சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களையும் சாகுபடி செய்து வருகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3F6d8fE
via

No comments