ஊழியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலைக்கு திரும்பினர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளர்கள் துளசிதாஸ், ராமு ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து வீடு திரும்பும்போது, மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ராமு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர் கொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சில டாஸ்மாக் கடைகள் நேற்று காலை திறக்கப்படவில்லை. ஆங்காங்கே மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் முன்பு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iBnlHj
via
No comments