பிரபல ஜவுளிக்கடை நிறுவனங்கள் ரூ.1,000 கோடிக்கு விற்பனையை குறைத்து காட்டியது வருமானவரித் துறை சோதனையில் கண்டுபிடிப்பு: ரூ.10 கோடி ரொக்கம்; ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
பிரபல ஜவுளிக்கடை நிறுவனங்கள் ரூ.1,000 கோடிக்கு விற்பனையை குறைத்து காட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து ரூ.10 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கிளைகளைக் கொண்ட 2 பிரபல ஜவுளிக்கடை நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்எழுந்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த 1-ம் தேதி முதல் 5 நாட்கள் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான நகைக்கடை, ஜவுளிக்கடை மற்றும்வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pBn5Lf
via
No comments