டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றார் தென்னாப்பிரிக்க வீரர் டி காக்!
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டி காக், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்திய அணிக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவிய நிலையில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் டி காக். தனது குடும்பத்துடன் கூடுதலாக நேரம் செலுத்தும் நோக்கில் இந்த முடிவை டி காக் எடுத்துள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
“இந்த முடிவை நான் அவ்வளவு எளிதாக எடுத்து விடவில்லை. எங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்தில் நாங்கள் அடியெடுத்து வைக்க உள்ள சூழலில் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். நீண்ட ஆலோசனைக்கு பிறகு எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். எனக்கு எல்லாமே எனது குடும்பம்தான்” என டி காக் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் டி காக். 54 டெஸ்ட் போட்டிகளில் 3300 ரன்களை எடுத்துள்ளார். ஆறு சதம் மற்றும் 22 அரை சதம் இதில் அடங்கும். அவரது சராசரி 38.82 ரங்களாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 141 ரன்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sMIGDO
via
No comments