Breaking News

“மும்பை அணியின் மறக்க முடியாத நினைவுகள்” - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ!

எதிர்வரும் ஐபிஎல் 2022 சீசனை முன்னிட்டு தற்போது விளையாடி வரும் 8 அணிகள் தங்கள் அணியில் இடம் பெற்றிருந்த சில வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது. அவர்கள் போக மீதமுள்ள வீரர்கள் அனைவரும் பிசிசிஐ சொன்ன விதிமுறையின் படி விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மும்பை இன்டியன்ஸ் அணியின் பிரதான வீரர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மும்பை அணி உடனான தனது பயணம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார் அவர். 

“மறக்க முடியாத இந்த இனிமையான நினைவுகளை நான் எனது வாழ்நாள் முழுக்க என்னுடன் சுமந்து செல்வேன். அந்த தருணங்களையும் தான். நட்பு பாராட்டி, பந்தம் ஏற்பட்டு, மக்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். பெரிய கனவுகளுடன் இளம் வீரராக அணிக்குள் அடியெடுத்து வைத்தேன். ஒன்றாகவே வென்றோம், ஒன்றாகவே வீழ்ந்தோம், ஒன்றாகவே போட்டியிட்டோம். எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டுமென சொல்வார்கள். ஆனால் ‘மும்பை இன்டியன்ஸ்’ என் நெஞ்சில் என்றென்றும் இருக்கும்” என அந்த வீடியோவின் கேப்ஷனில் தெரிவித்துள்ளார் ஹர்திக்.

இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 12: Friends2Support - ரத்தக் கொடையாளர், தேவைப்படுவோரை இணைக்கும் ஆப் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3dbuATx
via

No comments