வங்கிகள் தனியார்மயத்தை கண்டித்து வங்கி ஊழியர், அதிகாரிகளின் வேலைநிறுத்தம் தொடங்கியது
சென்னை: பொதுத் துறை வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதை கண்டித்துவங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அறிவித்த 2 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அவதிக்கு ஆளாகினர். ஒரே நாளில்நாடு முழுவதும் ரூ.37,000 கோடிமதிப்பிலான 39 லட்சம் காசோலைபரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதற்கான வங்கிகள் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிச.16, 17-ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வதாக வங்கிஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3GRKBum
via
No comments