இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டது. இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 267 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதைத் தொடர்ந்து, 82 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றும் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இறுதியில், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 68 ரன்னுக்கு சுருண்டது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. அந்த அணியின் ஸ்காட் போலண்ட் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ECtPxU
via
No comments