வாஷ் அவுட் ஆன இந்திய அணி - தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் கண்கலங்கிய தீபக் சாஹர்!
தென்னாப்பிரிக்காவுடனான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கேப் டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட் செய்ய களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணியின் டிகாக்கின் சதம் அடித்தார். அதேபோல் வேண்டர் டசன், மில்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 287 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்களும், தீபக் சஹார் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 283 ரன்கள் மட்டுமே எடுத்து வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியல் தவான் 61 ரன்களும் விராட் கோலி 65 ரன்ளும், சிறப்பாக விளையாடிய தீபக் சஹர் 34 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார். மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என நம்பிக்கையை தீபக் சாஹரின் ஆட்டம் கொடுத்தது. எதிர்பாராத விதமாக இறுதி கட்டத்தில் அவர் ஆட்டமிழந்துவிட்டார். இருப்பினும் அவர் ஆட்டமிழக்கும் போதும் இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இரண்டு விக்கெட்டுகள், 17 பந்துகள் கைவசம் இருந்தது. எப்படியாவது, அடித்துவிடுவார்கள் என சாஹர் எல்லைக்கோட்டிற்கு அருகிலேயே பேடை கூட கலட்டாமல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்ட உடனர் அவர் கண் கலங்கிவிட்டார். தன்னுடைய ஆட்டம் வீணாகிவிட்டதே, இந்திய அணி வெற்றி பெறவில்லையே என அவர் முகம் வாடிவிட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qShxxK
via
No comments