ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி படைத்த மோசமான சாதனை: சேவாக் - ரெய்னா வரிசையில் இணைந்தார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ஆர்வலர்கள் கடந்த 2019 முதலே எதிர்பார்த்துள்ளனர். ஆனால் ‘ரன்-மெஷின்’ என அழைக்கப்படும் கோலியால் ஏனோ அதை செய்ய முடியவில்லை. இத்தகைய சூழலில் ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ளார் அவர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ‘டக்’ அவுட்டானதால் அது நடந்துள்ளது. இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பேட்ஸ்மேன்களில் 14 முறை டக் அவுட்டான வீரர்களின் வரிசையில் இணைந்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சேவாக், ரெய்னா மற்றும் ஜாகீர் கான் 14 முறை டக் அவுட்டாகி உள்ளனர்.
இந்திய அணிக்காக விளையாட ஒருநாள் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரர்களில் பட்டியலில் ஹர்பஜன் சிங் (17), கங்குலி (16) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ரோகித் மற்றும் ராகுல் டிராவிட் 13 முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டக் அவுட்டாகி உள்ளனர்.
இந்தியா, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரை 2 - 0 என்ற கணக்கில் இழந்துள்ளது. மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றியாவது இந்தியா பெற வேண்டும். இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று, முதலில் பேட் செய்த போதும் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fMM9ud
via
No comments