நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புனு தாக்கல் நிறைவு; 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு60 ஆயிரம் பேர் மனு தாக்கல்: கடைசி நாளில் விறுவிறுப்பாக மனுக்களை அளித்த வேட்பாளர்கள்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜன.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம்தேதி ஒருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/x5dpqik
via
No comments