திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 நகராட்சி, 9 பேரூராட்சிகளை கைப்பற்றிய திமுக: 14 நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் அதிமுக படுதோல்வி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ள நிலையில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
தி.மலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 123 பதவிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் 150 பதவிகள் என மொத்தம் 273 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், போளூர் பேரூராட்சி 5-வது வார்டில் போட்டியின்றி திமுக வென்றதால், 272 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த பதவிகளை கைப்பற்ற 1,214 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bgKNh1
via
No comments