கடந்த டிசம்பரில் இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்கள் சென்னை திரும்பினர்: தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு
சென்னை: இலங்கை கடற்படையினரால் கடந்த டிசம்பர் மாதம் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களில் 9 பேர்நாடு திரும்பினர். அவர்கள் சொந்தஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர்.
ராமேசுவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த ஆண்டு டிச.18-ம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த நாளும் பல மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 நாட்களில் 56 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vneKAF6
via
No comments