தொடரும் ஸ்ரேயாஸ் அதிரடி: இலங்கையை 'ஒயிட்வாஷ்' செய்த இந்தியா
3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி. கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றி விட்ட நிலையில், தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியாவும், ஆறுதல் வெற்றிக்காக இலங்கையும் முனைப்புக் காட்டி விளையாடின. இந்தப் போட்டியில் முகமது சிராஜ், அவேஷ் கான், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இலங்கை பேட்டிங் இன்னிங்ஸில் தொடக்க, நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்த நிலையில், தினேஷ் சண்டிமால், தசுன் ஷனாகா சீராக ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய தசுன் ஷனாகா 38 பந்துகளில் 74 ரன்கள் (9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 16.5 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் 45 பந்துகளில் 73 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களுடனும் ஆட்டமிழாக்காமல் களத்தில் இருந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/YsuJa58
via
No comments